‘கொரோனா அச்சம்’ – பதுளையில் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தம்!

பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றிற்கு ஆஜராகிய சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினால், பதுளை நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பிலிருந்து பதுளைவந்து, பதுளை மேல் நீதிமன்றவழக்கொன்றிற்கு நேற்று ஆஜராகியிருந்தார்.

இதையடுத்து இவருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டத்தினால், அவர் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்டார். அப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,பதுளை மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மஜிஸ்ரேட் நீதிமன்றம், பசறை சுற்றுலா நீதிமன்றம், பதுளை தொழில் மன்றம் ஆகியவற்றின் கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பதுளை மேல் நீதிமன்றவழக்குகள் அடுத்த மாதம் 18ந் திகதியும் (18-12-2020)அதைத் தொடர்ந்ததிகதிகளிலும் ஏனைய மஜிஸ்ரேட் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 15ந் திகதியும் (15-12-2020),அதற்குப் பின்வரும் திகதிகளிலும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இத்தகவல்களைபதுளைசட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி இரமேஸ்குமார் தெரிவித்தார்.

மேற்கண்ட நீதிமன்றங்களின் வழக்குகள் அனைத்திற்கும் பதுளை சட்டத்தரணிகள் குழுவினரே ஆஜராவதினால்,தொற்று அச்சுறுத்தலின் பாதுகாப்பு கருதி பதுளை நீதிமன்றகடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பமைகுறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இரகசிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிவருவதும் தற்போது தெரியவந்துள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles