கம்பளை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு சுகாதார தரப்பினரும், பொலிஸாரும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை, சுகாதார நடைமுறைகளை மக்கள் உரிய வகையில் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் கம்பளை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.
இன்றைய தினமும் கண்காணிப்பு நடவடிக்கையில் பொலிஸார் இறங்கினர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கம்பளை நிருபர் லாவண்யா
