“கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் போலியான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சிஐடியினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
“ சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் போலியான கருத்துகளையே அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. எனவே, எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றோம்.” – எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், போதைப்பொரு இருந்தன என்று பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.