கொள்ளையர்கள்மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி: இருவர் தப்பியோட்டம்!

நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரங்களை அடுத்து கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் இருந்து கொள்ளையர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விளம்பரத்தைப் பார்த்து ருவன்வெல்ல பகுதிக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களுக்கு விளம்பரம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் அதிகாரிகளுடன் கொள்ளையர்களை சந்திக்கச் சென்றுள்ளனர்.

நாரம்மல பகுதியிலுள்ள இடத்திற்கு வருமாறு கொள்ளையர்கள் தெரிவித்ததோடு, குறித்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் அவர்களது காரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட கைகலப்பின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிசூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் ஒரு கொள்ளையர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இரண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர் கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles