தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருக்கையில் காய்ந்த மரமொன்று, தலையில் விழுந்ததில் எம்.டீ.தமயந்தி எனும் 51 வந்தான குடும்பப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உடுமுள்ள பகுதியில் வசிக்கும் இவர் தனது கணவருடன் வீட்டு தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இவரை பலாங்கொடை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
