கொழும்பிலிருந்து கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்துக்கு வருகைதந்திருந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, மெலிபன் வீதியிலேயே இவர் தொழில் புரிந்துள்ளார். இவருடன் தொழில்புரிந்த நிலையில் பொகவந்தலாவை வந்த இருவருக்கு கடந்த 16 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது பற்றி பொகவந்தலாவ சுகாதார பிரிவினரால், தொழுவ சுகாதார அதிகாரிகளுக்கு 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து யோகலெட்சுமி தோட்டத்துக்கு வந்த 25 வயது இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 25 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (26) வெளியான நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










