கொழும்பில் கொவிட் சோதனை திட்டம்! மாநகர சபை விசேட செயல்திட்டம்

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த நிலையம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இங்கு மேற்கொள்ளப்படும் அன்ரிஜன் பரிசோதனைகளுக்காக எவ்விதமான கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குள் தொழிலுக்காக வருகைத்தருபவர்கள் மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போரும் குறித்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles