கொழும்பு துறைமுகத்தில் உள்ள 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன.
தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக இந்த காணி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த காணியை சீன நிறுவனத்திற்கு வழங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு துறைமுக ஒன்றிய தொழிற்சங்க அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து குறித்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.
துறைமுக எதிர்கால அபிவிருத்திக்கு வலு சேர்க்கும், மிகவும் பெறுமதியான காணிகளை வெளியாருக்கு விற்கக் கூடாது என துறைமுக தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.