வேகமாக பரவக்கூடிய அதிக வீரியம்மிக்க கொரோனா ‘டெல்டா’ திரிபுடன் மேலும் மூவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கட்டிட நிர்மாணப்பணி இடம்பெற்றிருந்த பகுதியொன்றிலிருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கு முன்னர் கொழும்பு தெமட்டகொட பகுதியில் ஐவருக்கு கொரோனா டெல்டா தொற்றியிருந்தது. அதன்பின்னர் மாதிவெல பகுதியிலும் பெண்ணொருவர் குறித்த வைரஸ் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
