கொழும்பில் வேகமாக பரவும் ‘டெல்டா’ – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 30 வீதமானோர் ‘டெல்டா’ தொற்றாளர்கள் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 20 முதல் 30 வீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, தெற்கு, கிழக்கு உட்பட நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் டெல்டா பரவல் காணப்படுவதாகவும், இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு, சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் கடைபிடிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles