‘கொழும்பு துறைமுகர நகரம்’ – உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி!

 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள அனைத்து திருத்தங்களையும் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடியது.

இதன்போதே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டமூலம்மீது நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது.

Paid Ad
Previous articleகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு
Next articleநாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!