‘கொழும்பு மாவட்டத்தில் 32,744 பேர் கொரோனாவால் பாதிப்பு’

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவருகின்றது. நேற்று மாத்திரம் 192 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 744 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 முதல் நேற்றுவரை 19 ஆயிரத்து 44 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 929 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles