முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் 17.8 மில்லியன் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை பொலிஸாருக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
