‘கோட்டா கோ ஹோம்’ – நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா, உடபுசல்லாவ வீதியில் ஆவேலியா சந்தியில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆவேலியா கிராம பொதுமக்களும், இளைஞர் – யுவதிகளும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், “எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொடு”, “அடக்குமுறையை உடன் நிறுத்து!”, “மக்களுக்குத் தலைவணங்கி கோட்டா உடன் பதவி விலகு!”, “மருந்தும் இல்லை; பால்மாவும் இல்லை; பணமும் இல்லை” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

Related Articles

Latest Articles