கோட்டா, ரணில் கோ ஹோம் – ராதா முழக்கம்

” பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

மலையக மக்கள் முன்னணி எற்பாடு செய்திருந்த அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்று (03.07.2022) அட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.

இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” இலங்கையின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில்  உச்சம் தொட்டு – 56 சதவீதமாக பதிவாகியுள்ளது. முறையற்ற விதத்திலான பண அச்சீடு உட்பட மொட்டு கட்சி அரசின் பிற்போக்குத்தனமான ஆட்சி கொள்கையே இதற்கு பிரதான காரணம். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. ஒருவரின் வங்கி வைப்பில் 10 லட்சம் ரூபா இருந்திருந்தால் தற்போது அதன் உண்மையான பெறுமதி 5 லட்சமாகவே இருக்கும். அந்தளவுக்கு பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.” – எனவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை நீங்க வேண்டுமெனில் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகுவதே சிறந்த தேர்வாக இருக்கும். தற்போதைய ஆட்சியாளர்களை சர்வதேச சமூகம்கூட ஏற்கவில்லை.

கட்டாரிலுள்ள முக்கிய நிறுவனமொன்றை தடைபட்டியலில் கோட்டா அரசு இணைத்தது. இதன்விளைவாகவே கட்டாரில் இருந்து எரிபொருளை பெறுவதில் அரசு திண்டாடுகின்றது. முறையற்ற – தெளிவற்ற – கொள்கையற்ற ஆட்சிபோக்கே இதற்கு காரணம்.

சஜித் பிரேமதாவுக்கு சர்வதேச சமூகத்துடன் சிறந்த தொடர்பு உள்ளது. அரபுலக நாடுகளுடனும் நட்புறவை பேணிவருகின்றால். அவரால் தான் நாட்டை மீட்க வேண்டும் – என இராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles