கோட்டா – ரணில் மூடிய அறைக்குள் மந்திராலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்திற்கான விஜயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இருவரையும்தவிர இந்த சந்திப்பில் வேறு எவரும் பங்கேற்கவில்லை.

Related Articles

Latest Articles