இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையும் நேற்று முதல் அமுலாகும் வகையில் 93 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.










