” கோதுமை மாவினை அரசு கொள்வனவு செய்து – மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும்”

கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டமையானது பாமர மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செந்தில் தொண்டமான்,

” கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை சாதாரண பாமர மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. அவர்களுக்கு இந்த விலை அதிகரிப்பை ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது.

அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் கோதுமை மா விலை அதிகரிப்பு மக்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியுள்ளதுடன், பெருந்தோட்ட மக்களின் வாழ்விலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை கோதுமை மாவின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இவர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதுடன், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை இம்மக்களின் வாழ்வியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத சூழலில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மேலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கோதுமை மா உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பானது மக்களை பெரும் சுமையோடு அன்றாட வாழ்க்கையை வாழவேண்டிய நிலைப்பாட்டுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆகவே, இந்த விலை அதிகரிப்பை உடனடியாக குறைக்க கோதுமை மாவினை அரசு கொள்வனவு செய்து மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டுமென செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles