அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) பணியாற்றுவதற்கு நாடாளுமுன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த.சில்வா, பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியதன் காரணமாக கோப் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
