‘கோ ஹோம் கோட்டா’ – சம்பந்தனும் முழக்கம்!

” நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழக முதலமைச்சரின் இந்த நல்ல முயற்சியை வரவேற்கின்றோம். அதேபோல் இந்திய மத்திய அரசும் இக்கட்டான நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவவேண்டும். முழு அளவிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கவேண்டும்.

அதேவேளை, இந்திய அரசின் வேண்டுகோள்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டும். நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது இலங்கை அரசு தனது சுயலாப அரசியலைக் கைவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழகத்தினதும், இந்தியாவினதும் முழுமையான பங்களிப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும், இலங்கையின் தேசிய மட்டத்திலும் தொடரவேண்டும்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles