” க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.” – என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுவருகின்றோம். இது விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
உள்ளதமான நாட்டை உருவாக்குவதற்காகவே க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய பங்காளிகளாக மலையக மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இருப்பார்கள். அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும்.” – என்றார்.
