சஜித்துக்கு அக்கினிப்பரீட்சை: புதிய கட்சி குறித்து புரட்சி குழு எச்சரிக்கை!

” ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட உயர் மட்ட பதவிகளில் மாற்றம் அவசியம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் திறமையானவர்களால் புதிய கட்சியொன்று உருவாக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” ஐக்கிய மக்கள் சக்தியில் நிச்சயம் மாற்றம் இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லையேல் முன்னோக்கி பயணிக்க முடியாது.
எனது தொகுதி பண்டாரவளையாகும். ஜனாதிபதி, பொதுத்தேர்தல்களின்போது தொகுதியில் தோற்றதால் நான் தொகுதி அமைப்பாளர் பதவியை துறந்து, சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினேன்.

எனக்கு பதவி, பட்டம் முக்கியமில்லை. அரசியல் டீலும் கிடையாது. அதனால்தான் கூறவேண்டிய விடயங்களை வெளிப்படையாகவே அறிவித்துவருகின்றேன். ஏதேனும் கட்சி அரசியல் டீலில் ஈடுபட்டால் அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். அதற்குரிய முதுகெலும்பு எனக்கு இருக்கின்றது. ” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட பதவிகளில் மாற்றம் அவசியம். எப்படியான மாற்றம், யார், யார் மாற்றப்பட வேண்டும் போன்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன். கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை கட்சி தலைவரும் உணரவேண்டும்.” – என சமிந்த விஜேசிறி மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles