சஜித்தை ஜனாதிபதியாக்க சுதந்திரக்கட்சி மறுப்பு – வெளியானது அறிவிப்பு

” அரசிலிருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு, நாளையே வெளியேறுவதற்குத் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

 

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

” உரப்பிரச்சினை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் ஆகியன தொடர்பில் நாம் விமர்சனங்களை முன்வைத்தோம். இது சிலருக்கு வலித்திருக்கலாம். இதனால் அரசியிலிருந்து வெளியேறி விமர்சனங்களை முன்வைக்குமாறு வலியுறுத்திவருகின்றனர்.

எமது கட்சி தீர்மானித்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்கு நாம் தயார். எனினும், அத்தகையதொரு முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை. நாடு தொடர்பில் நாம் அதிகம் சிந்திப்பதாலேயே பொறுமை காத்துவருகின்றோம்.

அரசிலிருந்து வெளியேறிய பிறகு நாம் எங்கு செல்வது? சஜித்துக்கு பின்னால்சென்று, கைப்பாவையான அவரை ஜனாதிபதியாக்குவதா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது. அதேபோல தோல்வியடைந்த தலைவரான ரணிலை மீண்டும் பலப்படுத்துவதா என்ற பிரச்சினையும் உள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles