சஜித் அணியின் அரசியல் தளபதியும் ரணில் பக்கம்!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

கங்காராம விகாரையில் ஜனாதிபதியை இன்று சந்தித்த ராஜித, தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னணி அரசியல் செயற்பாட்டாளராக ராஜித செயற்பட்டார். 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Related Articles

Latest Articles