பஸில் ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருக்கக்கூடும். அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுகின்றது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
” நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கு நாம் தயார். ஆனால் இரு வாரங்கள் ஆகியும் அது இன்னும் வரவில்லை. இந்நிலையில் இடைக்கால அரசு அமைப்பதற்கும் சஜித் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக, சஜித்துக்கும், பஸிலுக்கும் இடையில் அரசியல் டீல் இருக்கக்கூடும்.” – என்றார் வாசு.