‘சந்தாவை நிறுத்தினாலும் சங்கத்தின் செயற்பாட்டை நிறுத்தவே முடியாது’

பெருந்தோட்ட கம்பனிகள் தொழிற்சங்க சந்தா பணத்தை தடுத்து நிறுத்துவதால் மலையக அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி விட முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

பெருந்தோட்ட கம்பகனிகள் தொழிலாளர் அங்கத்தவர்களிடம் தொழிற்சங்கங்களுக்கு அறவிடும் இம் மாத சந்தா பணத்தை அறவிடுவதை நிறுத்தியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஐந்து வருட காலமாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கை மலையக தொழிற்சங்கங்களும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்து பல்வேறு வடிவங்களிலும் போராட்டங்களை நடத்தி ஆறு ஆண்டுகளின் பின் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

இந் நிலையில் நாளொன்றுக்கு 16, 18 கிலோ பச்சைத்தேயி லை பறித்து வந்த தொழிலாளர்களை 20 கிலோ பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருவதுடன் அவ்வாறு 20 கிலோ கொழுந்து பறிக்க விடின் வாரத்தில் 2 நாட்களை வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டை நசுக்குமே நோக்கில் தொழிலாளர் அங்கத்தவர்களிடமிருந்து தோட்ட நிர்வாகங்களினூடாக அறவிடப்படும் மாதந்தசந்தா பணத்தை அறவிடாது தோட்ட நிர்வாக நிறுத்தியுள்ளது.

இவ்வாறு சந்தா பணத்தை தடுத்து நிறுத்துவதனால் அரசியல் செயற்பாட்டையே தொழிற்சங்க செயற்பாடைடையோ பெருந்தோட்டகம்பனிகள் தடுத்து விடமுடியது இனி வரும் காலங்களில் இன்னும் வீரியமிக்கதாக எமது தொழிற்சங்க செயற்பாடுகள்.” -என்றார்.

Related Articles

Latest Articles