ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிக்கா அம்மையாரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது , அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சந்திரிக்காவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடிவடையும்வரை கட்சி உறுப்புரிமையில் இருந்து அவர்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர தூக்கப்பட்டுள்ளார். புதிய பொதுச்செயலாளராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
