ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து பொருட்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் 72 பேரை அடையாளங் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்
ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக உரியவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேகநபர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிஸார் பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் 011 2 083049, 075 6371563 அல்லது 1997 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்










