சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் தேவையில்லை

” சபாநாயகர் பதவியை வகிப்பதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை. எனினும், தற்போதைய சபாநாயகர் பதவி விலகியுள்ளார். அதனை நாம் மதிக்க வேண்டும்.” – என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சாதாரண நபராக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னர், சபையில் ஆதரவு இருந்தால் சபாநாயகர் ஆகலாம். அதற்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை.

எனினும், சபாநாயகர் பதவியை வகித்த அசோக ரன்வல நாடாளுமன்றத்துக்கு தகவல் வழங்கும்போது பிழை நடந்திருக்கலாம். அது பற்றி எமக்கு கூறமுடியாது. ஆனாலும் அவர் பதவி விலகியுள்ளார். அதனை நாம் மதிக்க வேண்டும்.

அரசாங்கங்கள் ஆட்சிக்குவரும்போது சவால்கள் வரக்கூடும். அவற்றை எதிர்கொண்டு தீர்வுகளை வழங்குவதே சிறந்தது.” – என்றார்.

Related Articles

Latest Articles