சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களாக கருதப்படுகின்ற
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன எதிர்வரும் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் 03 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்போது மேற்படி இரு சட்டமூலங்களும் நீதி அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
இவ்விரு சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர், சட்டமூலங்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தரப்புகள் உயர்நீதிமன்றத்தை நாடலாம். நிச்சயம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என எதிரணிகளும், சிவில் அமைப்புகளும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
