” ஒற்றையாட்சிமுறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதன்மூலமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்நாட்டில் 70 வருடங்களாக இனப்பிரச்சினை இருந்துவருகின்றது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களால் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி எல்லாவிடயங்களையும் மறைக்க முடியாது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது . இந்த உண்மை ஏற்கப்பட்டு ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். ஒற்றையாட்சிமுறை நீக்கப்பட்டு, சமஷ்டி அரசமைப்பை கொண்டுவர. அதன்மூலமே இந்நாட்டை கட்டியெழுப்ப, எமது ஒத்துழைப்பையும் பெற முடியும்.” – என்றார்.










