சமஷ்டி அரசமைப்பை நிறைவேற்றவே மஹிந்தவை மௌனிக்க வைக்க சதியாம்

சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியில் ஓரங்கட்டுவதற்குரிய வியூகத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் புண்ணியத்தால்தான் ஜனாதிபதியால் யாழ்ப்பாணம் செய்து, சிரித்து பேச முடிகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மஹிந்த ராஜபக்சவையே தனது அரசியல் எதிரியாகக் கருதுகின்றது. அதனால்தான் அவரை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன்பின்னணியில் மற்றுமொரு திட்டமும் உள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சிக்கும் யூடியூப்பர் ஒருவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்சக்களை விமர்சிப்பதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்குகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. ராஜபக்சக்களை இலக்கு வைத்துள்ள யூடியூப்பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ராஜபக்ச நாமத்தை நாசமாக்குவதற்குரிய ஒப்பந்தத்தை செயல்படுத்தும் யூடியூப்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்னும் சில மாதங்களில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அது சமஷ்டி கட்டமைப்பாக இருக்கக்கூடும். ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார். தமிழர்களுடன் சிரித்து பேசுகின்றார். மஹிந்தவின் புண்ணியத்தால்தான் இப்படி நடந்தது என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே கூறியுள்ளார்.

சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு முன்னர் ஒரு அணியை மௌனிக்க வைக்க வேண்டும். அந்த அணிதான் மஹிந்த ராஜபக்ச அணி. ஒற்றையாட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது. தற்போது அவரை உள ரீதியில் தாக்க முற்பட்டனர்.

மஹிந்த தொடர்பில் மக்கள் மத்தயில் தவறான விம்பத்தை தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றனர். மக்கள் நேசிக்கும் ஒரு தலைவரை நாசப்படுத்திவிட்டால், இலகுவில் சமஷ்டி அரசமைப்பை கொண்டுவரலாம் என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்.” – எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles