சமஷ்டி இலக்கை அடைய தமிழப் பிரிவினைவாதிகள் சூழ்ச்சி – பதறுகிறார் குணதாச அமரசேகர

” பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.” – என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடு பயங்கரமான நிலையை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ளவில்லை. ஜனாதிபதியின் படமொன்று அண்மையில் ஊடகத்தில் வெளியானது. ஒரு புறத்தில் பிக்குகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் இருந்தனர். மறுபுறத்தில் உலகத் தமிழ் பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

இமயமலை பிரகடனம் எனக்கூறி பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆறு யோசனைகள் உள்ளன. இலங்கையை பெரடல் நாடாக்கி, அதன்மூலம் ஈழத்தை அடைவதே அதன் நோக்கமாகும்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இமயமலை பிரகடனத்துக்கு இணக்கம் என்ற தகவலை தற்போது அவர்கள் பரப்பி வருகின்றனர்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப இந்நாடு பெடரல் நாடாக மாறாமல் இருப்பதற்கு பிக்குகள் சமூகமே காரணம். நாட்டை அவர்கள் பாதுகாத்துவருகின்றனர். நாடு பிளவுபடுவதற்கு எதிராக மகாசங்கத்தினரே செயற்பட்டனர். ஒற்றையாட்சியைக் காக்க அவர்கள் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர். மன்னர் காலத்திலும் அவ்வாறு நடந்துள்ளது.

13 ஆவது முழுமையாக அமுல்படுத்த முடியாமல் இருப்பதற்கும் பிக்குகள் அழுத்தம் காரணம். இதனை தெரிந்துதான் பிக்கு சமூகம் தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே பிக்கு சமூகத்தின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த இமயமலை பிரகடனத்துக்கு இணங்ககூடாது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles