ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த மத்திய செயற்குழுக்கூட்டம் பெப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது சில பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது தலைவர், செயலாளர், பொருளாளர், தவிசாளர் உட்பட மேலும் சில பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
சம்பிக்க ரணவக்கவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
