சர்வகட்சி அரசை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றுக் காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின்போதுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேடஉரை நிகழ்த்தவுள்ளார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 3ஆம் திகதிஜனாதிபதி குறித்த உரையை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
