‘சர்வக்கட்சி அரசு’ – மைத்திரி – சம்பிக்க அவசர சந்திப்பு!

” நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்தகையோடு சர்வக்கட்சி அரசு அமைக்கப்படும்.” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சம்பிக்க ரணவக்க உள்ளடங்கலான 43 ஆம் படையணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

சர்வக்கட்சி அரசு உட்பட நான்கு பிரதான விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது ஊடங்களிடம் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க,

” சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த பின்னர் அரசு நிறுவப்படும். அது நடக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles