சர்வக்கட்சி மாநாட்டில் மொட்டு கட்சியும் பங்கேற்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles