‘சர்வதேசத்தை திருப்திப்படுத்தவா பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம்?’

பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்ட மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கானதல்லவென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் அனைவரும் ஒரே மனப்பான்மையுடன் செயல்பட வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். எனினும் அவர்களது நல்லாட்சி அரசில் ஏன் அதனை மேற்கொள்ளவில்லையென நான் கேட்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

மூலங்கள் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர், தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதல்ல என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எமது அரசாங்கம் 48 வருடங்களுக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசேட குழு அமைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தக் குழுவிடம் ஆலோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் தனியார் சுதந்திரத்தைப் பலப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. ஒருபோதும் அவை சர்வதேசத்தை திருத்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட விடயமல்ல. அரசியலமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு அதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles