தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பான முறையில் சர்வதேச உறவை பேணிவருகின்றது. அதன் பயணப்பாதை சிறப்பாக உள்ளது.” – என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இடதுசாரி அரசுகளுடன் அவ்வளவு இலகுவில் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவதில்லை. இப்படி இருந்தும் இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை சிறப்பாகக் கையாள்கின்றது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனும் நல்லுறவு கட்டியெழுப்படுகின்றது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடனும் உறவு பேணப்பட்டுவருகின்றது. வெளிவிவகாரக் கொள்கையில் மிகுந்த அவதானத்துடனும், சரியாகவும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இது வரவேற்கத்தக்க விடயம்.
அதேவேளை, நாட்டில் எதிரணி வலுவிழந்துவருகின்றது. எதிரணிகளிடம் தெளிவானதொரு கொள்கை இல்லை.” – என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.










