சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக குறைவாக கதைத்து அதிகமாக வேலை செய்யும் இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா

சர்வதேச அளவில் வீரர்களை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு நல்ல பயிற்சியும், நம்பிக்கையும் அளிக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அவர்களின் கனவை ஒருபோதும் கைவிடாமல், அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும்.

கலாநிதி பட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கலாநிததி ஒருவரினால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் மூலம் படிப்படியாக கல்வியைப் பெற்றுக் கொள்வது போன்றதே சர்வதேச மட்டத்திலான போட்டிகளை எதிர்கொள்ளும் மெய்வல்லுநர் வீரர்களும் பல ஆண்டுகளாக படிப்படியாக சிறந்த அர்ப்பணிப்புக்களுடன் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை நோக்கி தம்மை அளவிட வேண்டுமென்றால் விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOC), விளையாட்டு அமைச்சு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தனியார் துறைகளிலிருந்தும் கூட்டு பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேற வழியில்லாத கிராமப்புற விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட Crysbro Next Champ திட்டம், இலங்கையில் விளையாட்டு துறையில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லைக் குறித்தது என்று குறிப்பிட்ட திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, NOCSL Crysbro Next Champ Sports புலமைப்பரிசில் திட்டம் இலங்கையின் நீண்டகால விளையாட்டு முன்னேற்றத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு பொன்னான உதாரணம்.

அவர் மேலும் கூறுகையில், NOCSL Crysbro Next Champ திட்டத்தின் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்க முன் வந்த ஊசலளடிசழக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்ததைச் செய்ய தனியார் துறைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் NOCSL Crysbro Next Champ உதவித்தொகை திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஒரு திருப்புமுனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாம் முன்னேறுவதை உறுதி செய்ய படிப்படியான திட்டமிடல் செயல்முறை இருக்க வேண்டும், முதலில், திறமையான விளையாட்டு வீரர்களை சரியான முறையில் அடையாளம் காண்பது இந்த செயல்பாட்டின் மிக முக்கியமான படியாகும். மேலும் அவரது குடும்பத்தினரின் ஆதரவும், வீரரின் அர்ப்பணிப்பும் வெற்றிக்கு பெரும் சக்தியாகும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி நடவடிக்கையிலிருந்து சாதனை வரை ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுசரணையாளராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இங்குள்ள பல விளையாட்டு வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்களின் நிதி, ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் அனைத்து விளையாட்டுத் தேவைகளையும் வழங்குகின்றனர்.

அத்துடன் தேசிய சம்மேளனத்தினால் விளையாட்டு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டியினால் மேற்பார்வை செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில், வீரர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் மற்றும் அலட்சியத்தால் ஏற்படும் காயங்கள் காரணமாக, அவர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பை சில்வா ஞாபகப்படுத்துகையில், 3 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு சர்வதேச அளவிலான வீரரை உருவாக்கியது. இது வீரரின் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் அனுசரணையாளரின் வலிமையைப் பொறுத்தே சாத்தியமாகியுள்ளது.

‘எங்களுக்கு அது போன்ற விளையாட்டு வீரர்கள் தேவை, இலக்குகளை அடைய கூடுதல் அர்ப்பணிப்பு செய்ய தயாராக உள்ளவர்கள், ஆர்வமும் நெகிழ்ச்சியும் கொண்டவர்கள் விளையாட்டுக்கு ஆதாரமாக உள்ளனர்.’ என அவன் தெரிவித்தார்.

‘Crysbroவுடன், இந்த நாட்டின் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் செய்யவேண்டியவை அதிகம் இருந்தால், இந்த நாட்டின் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனைப் பார்த்து, கௌரவ அமைச்சரின் காலத்தில் செய்யப்பட்டது போலவும், விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச தரத்திற்குச் செல்லவும் உதவ வேண்டும். மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க உலகத் தடகள வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

‘நான் கவனித்த Crysbroவின் வெற்றி என்னவென்றால், அவர்கள் கிராமப்புறங்களில் தங்கள் வியாபாரத்தை மிகவும் சிரமத்துடன் தொடங்கினார்கள், இன்று அவர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நிறுவனத்தை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர்களின் தலைவர் உட்பட குழு மிகப்பெரிய அர்ப்பணிப்பை செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, தலைவர் இந்த முன்னேற்றத்திற்கான தனது கனவை அடைந்தார். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உள்ளது. முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் கனவை நனவாக்குங்கள்.’ என அவர் குறிப்பிட்டார்.

‘வீரர்கள் போராட வேண்டும், அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி தற்போதைய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாம் ஒரு நல்ல முடிவை பெற முடியும் என்று என்னால் சொல்ல முடியும். நான் சொல்ல விரும்பும் மற்றொரு விஷயம், குறைவாகப் பேசுவோம், கடினமாக உழைப்போம்.’

Related Articles

Latest Articles