சர்வதேச விசாரணை கோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்தி பவனி!

சர்வதேச நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்திப் பவனியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை சனிக்கிழமை வடக்கு கிழக்கு
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் செம்மணியில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டும் வகையில் யாழிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பமாகியது.

இவ்ஊர்திப் பவனியொன்று இன்று பல்வேறு இடங்களிற்கும் சென்று நாளை காலை போராட்டம் நடைபெறும் செம்மணியை வந்தடைந்து நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அனைவரும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles