எஸ்தோனிய நாட்டில் அண்மையில் நடைபெற்ற டல்லின் ப்ளாக் நைட்ஸ் (Tallinn Black Nights Festival ) விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இயக்குநர் ஒருவருக்கு விசேட ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராம் இலங்கோ இலங்கையின் விளம்பரப் படங்கள் குறும்படங்கள் சினிமா படங்கள் என ஏராளமான படைப்புகளை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குநர் ராம் இலங்கோ இயக்கிய #டெண்டிகோ எனும் சிங்கள மொழி மூல சினிமா படத்திற்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் இருந்து போட்டிக்கு வந்த திரைப்படங்களில் இருந்து #டெண்டிகோ படம் தெரிவு செய்யப்பட்டு மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தினை பிரபல தென்னிந்திய தமிழ் சினிமா இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் நிறுவனத்தின் தயாரிப்பில் இதே திரைப்படத்தை தமிழில் தென்னிந்தியாவில் இயக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
இத்திரைப்படத்தினை இலங்கையின் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஹிரன்யா Hiranya Perera Ilango தயாரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் விருது வென்றுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கீழுள்ள இணைப்பில் சென்று அந்த திரைப்பட டீசரை பார்வையிடலாம். 👇
இன்னும் வெளிவராத இத்திரைப்படம் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மட்ட போட்டிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் விரைவில் அது தொடர்பிலான விருது அறிவிப்புகள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
பதிவு -கேஜி –