இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 50 இற்கும் அதிக ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இன்று (26) காலியில் ஆரம்பமான சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.