சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

14 மில்லியன் பதிவுகள் கணினிமயமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles