மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்டம் 10 நம்பர் பிரிவில் 300 கிலோ லீக்ஸை களவாடி, நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவரவலை தோட்டத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாமிமலை 10 நம்பர் பிரிவில் உள்ள முத்துலிங்கம் பாக்கியநாதன் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்










