சாரதிகளே அவதானம்!
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகிறது.
இன்று (13) புதன்கிழமை அதிகாலை முதல் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், வீதிகளில் வாகனங்களுக்கு இடையிலான தூரத்தை அவதானிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு செல்லுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, நுவரெலியா – பதுளை, நுவரெலியா – அட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி ஆகிய பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுவதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.










