பதுளை, ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில், சாரதியின் சாதூர்யமான முயற்சியால் பாரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில் சுமார் 5 0 பேர் வரை பயணித்துள்ளனர். இதில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் கருத்தரங்கு ஒன்றுக்கு குறித்த பஸ்ஸில் வருகைத்தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா



