சிம்பாப்வேயில் உலகக் கிண்ண கனவு தகர்வு -முன்னேறப்போகும் அடுத்த அணி எது?

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் சிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி பெற்றநிலையில், கடைசி இடத்திற்கு சிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சிம்பாப்வே- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது சிம்பாப்வே.

நாளை நெதர்லாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாட தகுதி பெறும். ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles