வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த, காரிலேயே வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆணொருவரும், 14 பெண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர்.
கடந்த டிசம்பரில் ஜனாதிபதி ஆசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் கவிழ்க்கப்பட்டது முதலே இப்பகுதிகளில் வன்முறை நிலவி வருகிறது.
சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் துருக்கிய ஆதரவு பிரிவுகள், அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.