தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 50 இற்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இன்று பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
அவர்களுடனான சந்திப்பொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,
” பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் கடமையில் இணைந்துக்கொண்டமை மகிழ்ச்சி, நீங்கள் அனைவரும் எமது சமூகத்திற்கு மிகவும் பெருமதியானவர்கள். உங்களின் சேவை பெருந்தோட்ட சமூக மக்களுக்கும் இந்நாட்டிற்கும் பெருமதியானது, நீங்கள் அனைவரும் இளைஞர்கள் எனவே அனைவரும் தங்களது கடைமைகளை நேர்த்தியாக செய்வீர்கள் என நம்புகின்றேன்.
மேலும், அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது, மக்கள் மத்தியில் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது, போன்ற விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நிவர்த்திசெய்து தருகின்றேன்.” – என்றார்.
இக்கலந்துரையாடலின்போது, அமைச்சின் செயலாளர் D.P.G குமாரசிறி, அமைச்சின் ஏனைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.










